சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மொபட் மீது வேன் மோதி முதியவர் பலியானார். ஓமலூர் அருகே,ஆணைகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 65. குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில், பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் மாலை, 6:40 மணிக்கு இவர், தன் ஆக்டிவா மொபட்டில் சேலம் நோக்கி வந்துள்ளார். சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், அரசு பொறியியல் கல்லூரி எதிரில் வந்த போது, வேன் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X