வேலை தராததால் தொழிலாளி ஆத்திரம்: பொறியாளர் கார் கண்ணாடி உடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை தராததால் தொழிலாளி ஆத்திரம்: பொறியாளர் கார் கண்ணாடி உடைப்பு

Added : செப் 15, 2020
Share

மேட்டூர்: அனல்மின் நிலையத்தில், வேலை வாய்ப்பு வழங்காததால், ஆத்திரமடைந்த தொழிலாளி, தலைமை பொறியாளர் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.


மேட்டூர், பொன்னகர், இடும்பன் மகன் குமார், 42, இவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, மேட்டூர், 600 மெகாவாட் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனத்தில், தொழிலாளியாக வேலை செய்துள்ளார். அப்போது சில நபர்கள், அவரை அனல்மின் நிலையத்தில், நிரந்தர தொழிலாளியாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி, பல லட்சம் ரூபாய் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், நிரந்தர தொழிலாளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. விரக்தியடைந்த குமார், தன்னை புதிய அனல்மின் நிலையத்தில், பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த தொழிலாளியாக நியமிக்க வேண்டி, தலைமை பொறியாளர் நடராஜன் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். எனினும், அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. நேற்று காலை, 9:30 மணியளவில் தலைமை பொறியாளர் நடராஜன் காரில் பணிக்கு சென்றுள்ளார். காரை அனல்மின் நிலைய நுழைவாயில் நிறுத்திய போது, அங்கு நின்று கொண்டிருந்த குமார், இரும்பு பட்டையால் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். பின்னர், அவரிடம் குமார் தகராறு செய்துள்ளார். அனல்மின் நிலைய காவலர்கள், குமாரை பிடித்து கருமலைக்கூடல் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X