சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், மகளை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், தாய், மகளை கத்தியால் குத்திய வாலிபர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம், ஜாகீர்சின்னம்மாபாளையம், கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி செல்வி, 42. இவர், மகள் காயத்ரி, 20, உடன் கடந்த, 10 ஆண்டுகளாக தன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் செல்வியின் சகோதரர் முருகனின் மகன் ஹரிகரன், 22, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு செல்வியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். சொத்தை அபகரிக்க, தாத்தா வீட்டில் இருக்கிறாயா எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால், செல்வியை குத்த முயற்சித்துள்ளார். இதை காயத்ரி தடுக்கவே, தாய், மகள் இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹரிகரன் அங்கிருந்து தப்பி விட்டார். சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X