திருடப்படும் மரக்கன்று பாதுகாப்பு வேலிகள்

Added : செப் 15, 2020
Share
Advertisement

தலைவாசல்: தலைவாசல் அருகே, மரக்கன்றுகள் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் திருடப்படுகின்றன. தலைவாசல், வீரகனூர் சுற்று வட்டாரங்களில், விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மரக்கன்றுகளை, சாலையோரம், ஏரி, ஓடைகள் உள்ளிட்ட பகுதிகளில் நட்டு பராமரித்து வருகின்றனர். கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்க, வலைக்கூண்டு, துணி ஆகியவற்றை கொண்டு சுற்றி பாதுகாப்பு அளிக்கின்றனர். மணிவிழுந்தான், சார்வாய், காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், செடிகளுக்கு சுற்றப்பட்டுள்ள துணிகளை சேதப்படுத்துவதுடன், வலைக் கூண்டுகளை சிலர் எடுத்து சென்று விடுகின்றனர். தன்னார்வலர்கள், தங்கள் சொந்த செலவில் பொருட்களை வாங்கி, மரக்கன்றுகளை பராமரித்து வருகின்றனர். அவற்றையும் திருடி செல்வதால், அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது போன்ற திருட்டுகளில் ஈடுபடுவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X