பொது செய்தி

தமிழ்நாடு

சித்தேரி மலை சாலையில் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

அரூர்: தொடர் மழையால், சித்தேரி மலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல், தேக்கம்பட்டி, பேரேரி புதூர், சூரியக்கடை, ஜக்கம்பட்டி, அம்மாபாளையம் உட்பட, 62 மலை கிராமங்கள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து, 3,600 அடி உயரத்தில், கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி பஞ்.,ல், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன், சித்தேரி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. தொடர்ந்து, கடந்த, இரண்டு நாட்களாக சாரல்மழை பெய்தது. தொடர் மழையால், மண்சரிவு ஏற்பட்டு, அரூர்-சித்தேரி சாலையில், தோல்தூக்கி அருகே, பாறைகள் உருண்டு கிடக்கின்றன. இதனால், கடந்த, இரண்டு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து, சித்தேரி மலைக்கு பஸ் இயக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X