பொது செய்தி

தமிழ்நாடு

திருட்டை தடுப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, திருட்டை தடுப்பது குறித்து, போலீஸ் சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மூக்காரெட்டிப்பட்டி மற்றும் இருளப்பட்டி கானியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று, பொதுமக்களிடம் நேற்று, அ.பள்ளிப்பட்டி போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பரணி திருட்டை தடுப்பது குறித்த, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதில், பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது, நகை, பணம் ஆகியவற்றை உறவினர்கள் அல்லது வங்கி லாக்கரில் வைத்து விட்டு செல்ல வேண்டும். இரவில், பெண்கள் மற்றும் முதியோர் வீட்டில் இருக்கும்போது, சந்தேக நபர்கள் கதவை தட்டினால் திறக்கக்கூடாது. இரவில், வீட்டை சுற்றியுள்ள மின்விளக்குகளை எரியும்படி வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவதுடன், நாய் வளர்க்க வேண்டும். வாகனங்களை பாதுகாப்பற்ற முறையில் வீட்டிற்கு வெளியில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் தனியாக கோவில், தெருக்களில் நடந்து செல்லும்போது, தாங்கள் அணிந்திருக்கும் நகை தெரியாத வகையில், பார்த்து கொள்ள வேண்டும். தெருக்களில் புதியவர்கள் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரியப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் இருந்தன. இதில், தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், அரூர், மொரப்பூர், பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் சார்பில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X