அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்

Added : செப் 15, 2020
Share

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில், புதிதாக துவங்கப்பட்டுள்ள முதுகலை கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என, கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கணினி அறிவியல் துறையில், தங்களது மேற்படிப்பை தொடர, நடப்பு கல்வியாண்டில், புதிதாக எம்.எஸ்சி., கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க, பெரியார் பல்கலைக்கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி, நேற்று துவங்கியது. மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கல்லூரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X