பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ, மாணவியருக்கு பள்ளி சீருடை வழங்கல்

Added : செப் 15, 2020
Share
Advertisement

தர்மபுரி: இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள, 35 ஏழை மாணவ, மாணவியருக்கு, ஆசிரியர் ஒருவர், தன் சொந்த செலவில், பள்ளி சீருடைகளை இலவசமாக வழங்கினார். தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி, 35; இவர், தான் பணியாற்றும் பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்த, 35 ஏழை மாணவ, மாணவியருக்கு, சீருடை வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், தலைமை ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X