பஸ்சில் தவற விட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் தவற விட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த போலீசார்

Added : செப் 15, 2020
Share

அரூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலையை சேர்ந்த வருணதேவன், 18, முருகன், 18, ஆகியோர், நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து, திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ்சில் வந்தனர். மாலை, 4:30 மணிக்கு, அரூர் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் நின்றது. அப்போது, இருவரும், 25 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்த, தாங்கள் கொண்டு வந்த இரண்டு பைகளை பஸ்சில் வைத்து விட்டு, கீழே இறங்கி கடைக்கு சென்று திரும்பினர். அப்போது, பஸ் புறப்பட்டு சென்று விட்டது. அதிர்ச்சியடைந்த இருவரும், அங்கிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயில்சாமியிடம் விபரத்தை கூறினர். அவர், உடனடியாக அனுமன்தீர்த்தம் சோதனைச்சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், பஸ்சை நிறுத்தி, உள்ளே பணத்துடன் இருந்த இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு, பஸ்சை அனுப்பினர். அவற்றை, வருணதேவன், முருகன் ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் மயில்சாமி ஒப்படைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X