பொது செய்தி

தமிழ்நாடு

சங்க நிர்வாகிகளை நீக்க வேண்டி 8 மலை கிராம மக்கள் கோரிக்கை

Added : செப் 15, 2020
Share
Advertisement

தர்மபுரி: வத்தல்மலையில், புதிதாக துவங்கப்பட்டுள்ள, பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில், அனைத்து கிராம மக்களும் பங்கு பெறச்செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எட்டு கிராம மக்கள் ஒன்றிணைந்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


அந்த மனுவில் ?அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில், வத்தல்மலை பெரியூர், சின்னாங்காடு, கொட்டலகாடு, ஒன்றியங்காடு, மண்ணாங்குழி, நாயக்கனூர், பால்சிலம்பு, குழியனூர் ஆகிய எட்டு கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் விவசாய தேவைகள், வங்கிக்கடனுக்காக மலை அடிவார பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், அம்மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, 800 ரேஷன் கார்டுகளை பிரித்து, மழைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தை தோற்றுவித்து, இதை கடந்த, 12ல் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இச்சங்கத்துக்கு, தலைவர், இயக்குனர்களை, எட்டு கிராம மக்களுக்கு தெரியப்படுத்தாமல், ஒருதலைபட்சமாக, அ.தி.மு.க.,வினர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதில் அனைத்து கிராம மக்களுக்கும் சமமான அளவில் இயக்குனர்களை வழங்க வேண்டும். அதற்கு முறையான அறிவிப்பு செய்து, தலைவர், இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போது நியமனம் செய்யதுள்ளவர்களை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X