சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கிலிருந்து விழுந்த மூதாட்டி பரிதாப பலி

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஓசூர்: தளி அருகே, பைக்கிலிருந்து விழுந்த பெண் பலியானார். அவரது மகன், மகள் படுகாயம் அடைந்தனர். தேன்கனிக்கோட்டை, சிந்தாமணிதொட்டியை சேர்ந்தவர் சந்திரநாயக், 35; இவர், தன் தாய் போஜிபாய், 60, தங்கை கபாலி பாய், 28, ஆகியோரை, தன் ஹூரோ பேஷன் புரோ பைக்கில் அழைத்து கொண்டு, அகலகோட்டை - பாலதொட்டனப்பள்ளி சாலையில் கடந்த, 11 இரவு சென்று கொண்டிருந்தார். மேடுமுத்துக்கோட்டை அருகே வரும்போது, பைக்கில் இருந்து நிலைதடுமாறி மூன்று பேரும் கீழே தவறி விழுந்தனர். இதில், படுகாயமடைந்த அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போஜிபாய், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X