பொது செய்தி

தமிழ்நாடு

பிரசவத்துக்கு பணம் கேட்பதை கண்டித்து பா.ஜ., போராட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்கு வரும் பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடம், மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்பதை கண்டித்து, பா.ஜ.,வினர், மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மாதத்தில், 300க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் ஏழை, எளிய கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம், 1,000 முதல், 5,000 ரூபாய் வரை மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவப்பணிகள் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த நிலையில், நேற்று அப்பெண் பணம் கொடுக்கவில்லை எனக்கூறி, மருத்துவமனை ஊழியர் தமிழ்வாணன் என்பவர் அப்பெண்ணை தாக்கியுள்ளார். மேலும் இருவர், அதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதையறிந்த, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ.,வினர், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், மருத்துவமனை நுழைவுவாயில் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பூபதி, பா.ஜ.,வினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மூன்று ஊழியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X