பொது செய்தி

தமிழ்நாடு

தெருவை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மக்கள் மனு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: தெருவை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தியிடம் மனு அளித்தனர்.


அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதாப் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பிரதான தெரு, 12 முதல், 25 அடி வரை அகலமாக இருந்தது. ஆனால், குடியிருக்கும், 32 குடும்பத்தினர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறிது சிறிதாக தெருவை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர். இதனால் தற்போது, 3 முதல், 5 அடி வரை மட்டுமே பொதுப்பாதை உள்ளது. இத்தெருவின் வழியாகத்தான் கோவில் திருவிழா ஊர்வலம், எருது விடும் திருவிழா மற்றும் பல்வேறு பணிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் இந்த தெருவின் வழியாகத்தான், சென்று வந்தன. ஆனால், தற்போது இந்த ஆக்கிரமிப்பால், எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாமலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வராமலும் தடை பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, டி.ஆர்.ஓ., சாந்தியிடம் கேட்டபோது, ''தெருவை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X