பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் மழையால் உருவான புதிய நீர்வீழ்ச்சி

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஓசூர்: தொடர் மழையால், வனப்பகுதியில் புதிய நீர்வீழ்ச்சி உருவாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், தேன்கனிகோட்டை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தேன்கனிக்கோட்டை அடுத்த கெம்பகரை வனப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல், தொடர்ந்து பெய்த கனமழையால், அங்குள்ள மலைத்தொடர்களில், நீர்வீழ்ச்சி உருவாகி உள்ளது. மனிதர்கள் நடமாட்டமில்லாத அங்கு, யானை, மான், காட்டு எருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன. கனமழையால் உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சி, வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளின் தாகத்தை தீர்த்து வருகிறது. நீர்வீழ்ச்சியில், தண்ணீர் அதிகளவில் கொட்டி வருவதை வனத்துக்குள் சென்ற சிலர், வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில், பரப்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X