பொது செய்தி

தமிழ்நாடு

தகுதியற்ற 3,360 பயனாளிகளிடமிருந்து ரூ.1.35 கோடி அரசு கணக்கில் சேர்ப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில், தகுதியில்லா நபர்களின் பெயர்களை நீக்கம் செய்து, வழங்கப்பட்ட தொகை திரும்ப பெறப்பட்டு வருவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில், பதிவு செய்த தகுதியற்ற பயனாளிகளின், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம், தொகையை மீட்டெடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதில், தகுதியற்றதாக கண்டறியப்பட்ட, 8,408 பயனாளிகளில், நேற்று வரை, 3,360 பேரின் வங்கிக்கணக்கில், ஒரு கோடியே, 35 லட்சத்து, 2,000 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 5,048 பயனாளிகளிடமிருந்து, உரிய தொகையை வருவாய்த்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலம் வசூலித்து, அரசு கணக்கில் செலுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தில், தகுதியற்ற பயனாளிகள் மற்றும் அவர்களை தவறுதலாக சேர்த்த கணினி மைய உரிமையாளர்கள், சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X