பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர் ஒட்டிய போஸ்டரால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர், ஒட்டிய போஸ்டரால், கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நடிகர் ரஜினியின் பூர்வீக கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம். கடந்த, 2019ல் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்த, தொழிலதிபர் மதியழகன், தி.மு.க.,வில் இணைந்தார். இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து, தி.மு.க.,வுக்கு சென்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச்செயலாளராக இருந்த சீனிவாசன், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். நடிகர் ரஜினி, தேர்தலில் நிற்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதுமிருந்து அவரது ரசிகர்கள் போஸ்டர் மூலம், அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால், ரஜினி மக்கள் மன்ற தலைமையின் அனுமதியின்றி, யாரும் போஸ்டர் அடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில், ரஜினி மக்கள் மன்றம், வேப்பனஹள்ளி ஒன்றியம் சார்பில், திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'நாச்சிக்குப்பம் மன்னனே ஆட்சிக்கு வா, அரசியல் மாற்றம் இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை, திராவிட அரசியல் போதும்' என்கிற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து, தி.மு.க.,வில் இணைந்த சோமுசுந்தரம் என்பவர், ரஜினியுடன் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் இதே சோமசுந்தரம், தி.மு.க., நிர்வாகிக்கு, பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது. ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர், ஒட்டிய போஸ்டரால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X