பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, டாஸ்மாக் பணியாளர்கள் கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 497 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் கடந்த, 17 ஆண்டுகளாக, பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியார்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறுவதற்கான இயக்கம், நேற்று துவங்கப்பட்டு, அதற்கான படிவங்களை டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று, கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள டாஸ்மாக் கடை பணியாளருக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் அப்துல்கலீல், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கையெழுத்து படிவங்களை வழங்கினர். இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், 'கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பங்களை சேர்ந்த, 50 ஆயிரம் பேரிடம், இம்மாத இறுதி வரை கையெழுத்து பெற்று, தமிழக முதல்வரிடம் வழங்க உள்ளோம்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X