பொது செய்தி

தமிழ்நாடு

'குழந்தை திருமணம் ஏற்பாடு செய்தால் 2 ஆண்டுகள் சிறை'

Added : செப் 15, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 1 முதல், 10 வரை, மின்னாம்பள்ளி, வெப்படை, மோகனூர், புதுச்சத்திரம், நல்லூரில், ஏழு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமண ஏற்பாடு செய்வது சட்டப்படி குற்றம். மீறுபவர்களுக்கு, இரண்டு ஆண்டு கடுஞ்சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமணம் பற்றி, 181, 1098 என்ற இலவச எண்களில் புகார் தெரிவிக்கலாம். மேலும், வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் உதவி தேவைப்படும் பெண்கள், ஒருங்கிணைந்த சேவை மையத்தை 181, 1098 என்ற இலவச எண்ணின் மூலமாகவோ அல்லது ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகியை, 96556 52896 என்ற மொபைல் எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் எச்சரித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X