தேசிய குழந்தைகள் விருது: விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய குழந்தைகள் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 15, 2020
Share

நாமக்கல்: வரும், 2021ம் ஆண்டுக்கு, புத்தாக்கம், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், சமூகசேவையும் மற்றும் வீரம் சார்ந்த செயல்களில், சாதனை புரிந்தவர்களுக்கு, ஜன., 26ல், நடக்கும் குடியரசு தினவிழாவில், 'தேசிய குழந்தைகள் விருது' வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான கருத்துரு, இன்றுக்குள் (www.nca.wcd.nic.in) என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதியான நபர்கள், இணையதளத்தில், விண்ணப்பித்த விபரத்தை, மாவட்ட சமூகநல அலுவலர், கலெக்டர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு, 'சமூகநல அலுவலர், அறை எண்.19, மாவட்ட கலெக்டர் அலுலகம், நாமக்கல்' என்ற முகவரியிலோ, 04286 -280230 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X