பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம் :90 மனுக்கள் அளிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாரம் தோறும், திங்கட்கிழமை நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரசு தலைமை செயலாளர், கலெக்டர்களுடன், காணொலி மூலம் மேற்கொண்ட கூட்டத்தில், தாசில்தார் அலுவலகங்களில், மண்டல அலுவலர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த அறிவுறுத்தினார். அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர், கொல்லிமலை மற்றும் ப.வேலூர் தாலுகா அலுவலகங்களில், மண்டல அலுவலர்கள் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இக்கூட்டம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தது. மாவட்டத்தில் உள்ள, எட்டு தாலுகா அலுவலகங்களில் நடந்த கூட்டத்தில், முதியோர் மற்றும் விதை உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம், 90 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X