பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் வெளியூர் கட்டுமான தொழிலாளர்கள் வருகையால் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகினறன. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் எப்போதும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும். கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெரும்பாலும் வெளியூரை சேர்ந்தவர்கள். அவர்கள் பணிகள் நடக்கும் இடத்திலேயே சிறியளவு கொட்டகை அமைத்து அதில் தங்கி கொண்டு பணி புரிந்து வந்தனர். கடந்த மார்ச் இறுதியில் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், அவர்கள் மீண்டும் பள்ளிபாளையம் வந்துள்ளனர். இதனால், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனால் மணல், செங்கல், சிமென்ட் போன்ற கட்டுமான பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X