பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை: 'மாஜி' வீரர்களின் சிறாருக்கு அழைப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

நாமக்கல்: முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், தொழில் நுட்பம் மற்றும் தொழில் முறை சார்ந்த முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, பிரதமரின், கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், மாணவருக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய், மாணவியருக்கு, 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, பிளஸ் 2 பாடப்பிரிவில், 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற தகுதி உள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, www.ksb.gov.in என்ற இணையதளம் மூலம் (2020-21), டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து, அவற்றை பதிவிறக்கம் செய்து, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை, நேரிலோ அல்லது 04286 -233079 என்ற எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X