சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, ஆலாம்பாளையம் கோரைக்காடு பகுதியை சேர்ந்தவர் யசோதா, 45. இவர், நேற்று காலை தங்கள் விவசாய நிலத்திற்கு சென்ற கொண்டிருந்தார். தடம் ஈரமாக இருந்ததால், அப்பகுதியில் இருந்த, 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில், 20அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால், காயம் படவில்லை. அதேபோல், யசோதாவுக்கு நீச்சல் தெரிந்ததால், உள்ளே நீந்திக் கொண்டிருந்தார். ஆனால், மேலே வரமுடியவில்லை. அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். ஆனால் அவர்களாலும் அவரை மீட்க முடியவில்லை. இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து யசோதாவை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X