பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த முதலீட்டில் லாபம் தரும் பீர்க்கங்காய்: விவசாயி ஆர்வம்; தினமும் 100 கிலோ அறுவடை

Added : செப் 15, 2020
Share
Advertisement

எலச்சிப்பாளையம்: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதால், பீர்க்கங்காய் சாகுபடியில், ஆர்வம் காட்டிய விவசாயி, தினமும், 100 கிலோ அறுவடை செய்து வருகிறார்.


நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் மணி, 61. அரை ஏக்கரில், பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளார். தற்போது, அறுவடைக்கு வந்துள்ள நிலையில், தினமும், கிலோ கணக்கில் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து, மணி கூறியதாவது: பீர்க்கங்காய், 70 நாள் பயிராகும். அவற்றை கோப்பு பந்தல் அமைத்து, பயிரிட்டுள்ளேன். விதை ஊன்றி அறுவடைக்கு வருவதற்குள், களை எடுத்தல், உரச்செலவு உள்பட, 60 முதல், 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளேன். விதை ஊன்றி, 40 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும், தொடர்ந்து, 20 முதல், 30 நாட்களுக்கு அறுவடை செய்யலாம். கடந்த, 10 நாட்களாக, தினமும், 100 கிலோ பீர்க்கங்காய் அறுவடை செய்து வருகிறேன். அவற்றை, வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக வங்கி செல்கின்றனர். நானும், ஜேடர்பாளையம், பெரியமணலி, சின்னமணலி, வையப்பமலை, ஏளூர் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் சந்தைக்கு சென்றும் விற்பனை செய்து வருகிறேன். கடந்த, 10 நாட்களில், முதலில், பாதி அளவுக்கு எடுத்துள்ளேன். மீதம் உள்ளவற்றை, வரும், பத்து நாட்களில் எடுத்துவிடுவேன். அதற்கு மேல், கிடைக்கும் வருவாய் லாபம். பீர்க்கங்காய்க்கு, மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பு இருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X