ஆஞ்சநேயர் கோவிலில் அர்ஜூன் சம்பத் வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் கோவிலில் அர்ஜூன் சம்பத் வழிபாடு

Added : செப் 15, 2020
Share

நாமக்கல்: இந்து மக்கள் கட்சி சார்பில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என, அவரது புகைப்படத்தை வைத்து பூஜை நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காகவே இதனைப் பற்றி பேசுகிறார். 'நீட்' தேர்வு வந்ததால் தான் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, நடிகர் சூர்யா போன்றோரும், 'நீட்' தேர்வு பற்றி தெரியாமல் பேசுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X