பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 3,462ஆக உயர்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு போலீசார் உள்பட நேற்று, ஒரே நாளில், 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருச்செங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 32 வயது பெண் போலீஸ், மல்லசமுத்திரத்தில் பணியாற்றும், 32 வயது ஆண் போலீஸ், ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றும், 48 வயது ஆசிரியை ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, ப.வேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால், பாதிக்கப்பட்டனர். அதேபோல், ஈரோடு, திருச்சி, சேலம், கரூர், கோவை மற்றும் கர்நாடகா மாநிலம் சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,462 ஆக உயர்ந்தது. நேற்று சிகிச்சை குணமடைந்து 136 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, பூரண குணம் அடைந்தவர்கள், 2,518 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று, ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 51 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X