பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி நிர்வாகத்தில் 'மாஜி' தலைவர் தலையீடு: நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

நாமக்கல்: மோகனூர் ஒன்றியம், ஒருவந்தூர் பஞ்., மக்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்து, முன்னாள் பஞ்., தலைவர் கைலாசம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், தற்போதைய ஊராட்சி தலைவர் அருணாவின் கணவர் செல்லராசாமணியின் தலையீடு ஊராட்சி நிர்வாகத்தில் இருப்பதாகவும், தன் மனைவிக்கு ஓட்டுபோடாத நபர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினர். அதையடுத்து, கலெக்டர் மெகராஜிடம் மனு அளித்தனர். இதற்கிடையே, அனுமதி பெறாமல், ஊரங்கை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக, அவர்கள் மீது, நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இதுகுறித்து, செல்ல ராசாமணி கூறியதாவது: நான், ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. எப்போது, ஊராட்சி அலுவலகம் சென்றாலும், செயலாளர் அறையில் தான் அமர்வேன். என் மனைவிதான், மக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். ஆனால், உள்ளாட்சி தேர்தலின் போது, கைலாசத்தின் தாயார் நாச்சம்மாள், என் மனைவியிடம் தோல்வி அடைந்தார். அந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். குஞ்சாயூர் மயானத்திற்கு செல்லும் பாதையை, அளவீடு செய்து அத்து காண்பிக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தன் பேரில், ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், என் தலையீடு எதுவும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X