பொது செய்தி

தமிழ்நாடு

சாய ஆலைகளுக்கு 'சீல்' வைப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: சமயசங்கிலி, கவுண்டம்பாளையத்தில் அனுமதி பெற்ற சாய ஆலைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. குமாரபாளையத்தில், 47, பள்ளிபாளையத்தில், 80 அனுமதி பெற்ற சாய ஆலைகள் உள்ளன. அனுமதி பெறாத ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில தவிர, பெரும்பாலான சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுவதால், ஆற்றில் கலந்து தண்ணீர் மாசடைந்து விட்டது. இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் அலர்ஜி முதல் புற்றுநோய் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும் கால்நடைகளும், மீன்களும் பாதிக்கப்படுகினறன. குமாரபாளையம் மாவட்ட தலைமை சுற்றுசூழல் பொறியாளர் செல்வகுமார் தலைமையில் சாய ஆலைகளில் கடந்த, 7 முதல் ஆய்வு செய்தனர். விதிமுறை மீற செயல்பட்ட சாய ஆலைக்கு, 'சீல்' வைத்து வருகின்றனர். நேற்று அனுமதி பெற்று, விதிமுறை மீறி செயல்பட்ட சாய ஆலைகளுக்கு, 'சீல்' வைத்தனர். இது குறித்து அவர் கூறியதாவது: சமயசங்கிலி, மற்றும் கவுண்டம்பாளையத்தில், அனுமதி பெற்றுள்ள இரண்டு பெரிய சாய ஆலைகள் விதிமுறை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் அந்த ஆலைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X