பொது செய்தி

தமிழ்நாடு

ஆம் ஆத்மி சார்பில் ஆக்சிஜன் பரிசோதனை

Added : செப் 15, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொது மக்களுக்கு இலவச ஆக்சிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனோ தொற்று அதிகமாக பாதித்த நிலையில், அரசியல் கட்சிகள் பொது மக்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி சார்பாக அக்கட்சியின் தேச கட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சுதா, மாவட்ட செயலாளர் ஜெயந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, நாமக்கல் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில், மக்களுக்கு ஆக்ஸிஜன் பரிசோதனை செய்தனர். மேலும், கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தப்படுத்த செய்தனர். பெயர், முகவரியுடன் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடனே, மருத்துவமனைகளை அணுக வலியுறுத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தானாகவே முன்வந்து ஆக்ஸிஜன் பரிசோதனை செய்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X