சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோரண வெடி வெடித்ததில் ஏழு வயது சிறுவன் பலி

Added : செப் 15, 2020
Share
Advertisement
ப.வேலூர்: உப்பிலியபுரம் அருகே குலதெய்வ வழிபாட்டின் போது தோரண வெடி வெடித்ததில், பொத்தனூரை சேர்ந்த சிறுவன் பலியானார்.நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன். ஹைதராபாத்தில் மத்திய ரிசர்வ் படை போலீசான இவர், தற்போது விடுப்பில் வந்துள்ளார். நேற்று இவர், தனது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் அருகே உள்ள

ப.வேலூர்: உப்பிலியபுரம் அருகே குலதெய்வ வழிபாட்டின் போது தோரண வெடி வெடித்ததில், பொத்தனூரை சேர்ந்த சிறுவன் பலியானார்.


நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன். ஹைதராபாத்தில் மத்திய ரிசர்வ் படை போலீசான இவர், தற்போது விடுப்பில் வந்துள்ளார். நேற்று இவர், தனது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு தோரண வெடி வெடிக்கப்பட்டதில் எதிர்பாராதவிதமாக வெடி ஒன்று சிதறி லோகநாதனின் மகன் சசிதரன், 7, மீது விழுந்து வெடித்தது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். அதையடுத்து, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்காமல், பொத்தனூருக்கு சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். தகவலறிந்த முசிறி டி.எஸ்.பி., பிரம்மானந்தன் தலைமையிலான போலீசார், ப.வேலூர் போலீசார் உதவியுடன், பொத்தனூருக்கு சென்று சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறுவனின் உடலை மீட்டு ப.வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக முசிறி போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X