சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

நாமக்கல்: கலெக்டர் அலுவலகத்தில், தாயாருடன் வந்த விவசாயி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.


கொல்லிமலை மேக்கினி நாட்டை சேர்ந்தவர் பூச்சம்மாள், 52. அவரது மகன் மீனாட்சி, 35. அவர்களுக்கு சொந்தமான, ஐந்து ஏக்கர் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் அபகரிக்க முயற்சி செய்ததுடன், தாய், மகன் இருவரையும், வீட்டு பகுதியில் இருந்தும், விவசாய நிலத்துக்குள் வர முடியாத வகையில், தகராறு செய்து வந்தனர். அதனால், விரக்தி அடைந்த இருவரும், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, அவர்களை தடுத்து, நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X