தமிழ்நாடு

கொரோனா வழிகாட்டு நெறிமுறை மீறல்: வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: சமூக இடைவெளி இல்லாமல், ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை போலீசார், சோதனை செய்து அபராதம் விதிக்கின்றனர்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், நகை கடைகள், மொபைல் போன் விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், பொதுமக்கள் கூட்டம், அலை மோதுகிறது. மேலும், சரக்கு வாகனங்களில் வழக்கம் போல், பொதுமக்கள் அதிகளவில் ஏற்றி செல்லப்படுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முக கவசம் அணிவது இல்லை. இதனால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் நகரில் விதிமுறைகளை மீறி, பொது மக்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களை போலீசார் நிறுத்தி, சோதனை செய்து அபராதம் விதிக்கின்றனர். அதே போல், இருசக்கர வாகனங்களில் முக கவசம் இல்லாமல் செல்லும் நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஒதுங்கி கொண்ட நகராட்சி நிர்வாகம்: கரூர் நகராட்சி பகுதிகளில், விதிமுறைகளை மீறி இரவு, 9:00 மணி வரை வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளன. அதை, நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. மேலும், நகராட்சி பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதித்து, வசூல் செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில், சிறிது நேரம் மட்டும், நகராட்சி ஊழியர்கள் போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து, அபராதம் வசூல் செய்கின்றனர். இதனால், முக கவசம் இல்லாமல் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X