பொது செய்தி

தமிழ்நாடு

தொலைபேசியை எடுக்காத ரயில்வே ஊழியர்கள்: கரூர் பொதுமக்கள் கடும் அவதி

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: கரூர், ரயில்வே ஸ்டேஷன் தகவல் மையத்தில் உள்ள தொலைபேசியை, சில நேரங்களில் ஊழியர்கள் எடுத்து பதில் சொல்லாததால், சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்களை பெற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.


ஊரடங்கு உத்தரவு வரும், 30வரை அமலில் உள்ளது. கடந்த, 7 முதல் தமிழகத்தில் மட்டும், 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், நாடு முழுவதும், 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான, முன்பதிவு கடந்த, 10 முதல் நடந்து வருகிறது. தமிழகத்தில், திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட, மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சிறப்பு ரயில்கள் குறித்து தகவல் அறிய கரூர் ரயில்வே ஸ்டேஷன் தகவல் மையத்துக்கு போன் செய்தால், ஊழியர்கள் எடுப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, கரூர் மாவட்ட மக்கள் கூறியதாவது: கரூர் ரயில்வே நிலைய விசாரணை மற்றும் தகவல் மையத்தில், பயணிகள் தகவல் தெரிந்து கொள்ள வசதியாக, தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டு, கரூர் வழியாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும், கோவை - மயிலாடுதுறை வரை இயக்கப்படுகிறது. கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது குறித்து, சில நேரங்களில் தகவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ள தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால், ரயில்வே ஊழியர்கள் அதை எடுத்து பதில் சொல்வது இல்லை. சில நேரங்களில் போனை எடுத்து கீழே வைத்து விடுகின்றனர். இது குறித்து, ஸ்டேஷன் மாஸ்டருக்கும், உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X