மாணவர்களுக்கு மன உறுதியை உங்கள் கட்சி அளிக்கலாமே

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (18) | |
Advertisement
நீட் தேர்வை எதிர்த்து, மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க நான் செய்யப்போவது என்ன; மத்திய, மாநில அரசுகள் சிந்தித்து, துரிதமாக செயல்படுத்த வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தரவேண்டியது நம் கடமை - நடிகர் கமல் ஹாசன்'உங்கள் கட்சி சார்பில், மாணவர்களுக்கு, மன உறுதி வழங்க, சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யலாமே...' என, அறிவுரை கூறத்
மாணவர்களுக்கு மன உறுதியை உங்கள் கட்சி அளிக்கலாமே

நீட் தேர்வை எதிர்த்து, மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க நான் செய்யப்போவது என்ன; மத்திய, மாநில அரசுகள் சிந்தித்து, துரிதமாக செயல்படுத்த வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தரவேண்டியது நம் கடமை - நடிகர் கமல் ஹாசன்


'உங்கள் கட்சி சார்பில், மாணவர்களுக்கு, மன உறுதி வழங்க, சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன் அறிக்கை.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் உள்ள சிலர், புரிதல் குறைவால், விமர்சனம் செய்கின்றனர். அ.தி.மு.க., கூட்டணி கட்சி என்றாலும், உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடக் கூடாது. கொரோனா காலத்தில், சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டாலும், பா.ஜ., கட்சி, மக்களுடன் அரசியல் இடைவெளி இல்லாமல் இருக்கிறது. வரும், 2021ல், பா.ஜ., கட்சி வலிமை காட்டும் - எச்.ராஜா


'நோட்டாவுக்கு அதிகமாக அல்லது கம்யூ.,களுக்கு அதிகமாக என, எவ்வளவு வலிமையை காட்டும் என சொன்னால், இன்னும் நன்றாக இருக்கும்' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி.தமிழ், தாய்மொழி என்றால், ஹிந்தி நட்பு மொழி என, மக்கள் கருதுகின்றனர். இன்றைய கால கட்டத்தில், மக்கள் எல்லா மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என விரும்புகின்றனர்; அது, தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை - நடிகை காயத்ரி ரகுராம்


'தமிழ்மொழி, எந்த காலத்திலும் அழியாத வண்ணம், உலகம் முழுதும் வியாபித்துள்ளது. பிற மொழிகளை துாற்றுவதன் மூலம், தமிழை வளர்க்கலாம் என, கருதுவோர் அறிவிலிகள்...' என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி.பிரதமர் விவசாய உதவித் திட்டத்தில், தமிழகத்தில் ஒரே மாதிரியான முறைகேடு நடந்துள்ளது. அதிகாரிகள் பங்கேற்புடன் முதல் முறையாக நடந்த மிகப்பெரிய ஊழல் இது தான். இந்த ஊழலில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.


latest tamil news

'முறைகேட்டை யார் செய்தது என்பதை தெரிந்தது போல, அறிக்கை வெளியிடுவதை வைத்தே, இது அரசியல் அறிக்கை என்பது தெளிவாகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை.பிரதமரின், கிசான் திட்டத்தில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது - தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி.


'இத்தகைய முறைகேடு நடப்பதை எப்படி, தமிழக உளவுப் பிரிவு போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள், துவக்கத்திலேயே கண்டுபிடிக்க மறந்தனர் என்ற கேள்வி எழுகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-செப்-202019:26:52 IST Report Abuse
Bhaskaran பள்ளியிறுதித்தேர்வில் ஆயிரத்துக்குமேல் வாங்கியவர்கள் மருத்துவக் கல்விப்பற்றி நினைப்பதில் அர்த்தம் உள்ளது வெறும் அறுபது விழுக்காடுகூட வாங்காமல் நீட் thervu எழுதாமல் தளபதி எப்படி மருத்துவ சீட் கொடுப்பார்கள் அவர் தான் விலக்கணம் . அல்லது ஆலடி அருணாச்சலம் காளிமுத்து போன்றவர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ சீட் தந்ததுபோல் இப்போ நீட் போராளிகள் என்ற ஒதுக்கீடும் கழக ஆட்சியில் தரலாம்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
15-செப்-202018:56:00 IST Report Abuse
spr படிப்பின் தரம் தாழ்த்திய பெருமை கழக அரசுகளுக்கே உரியது. இன்று தென்னிந்தியா (குறிப்பாக தமிழகம்) உற்பத்தி, கட்டிடம் கட்டுதல் போன்ற பல்வேறு தொழிலுக்கும் வடமாநில இளைஞர்களை நம்பியே நிற்கும் அவல நிலை கலைஞரால் உருவாக்கப்பட்டது தன்னிச்சையாக காளான் போல தரமில்லாத பொறியியற் கல்லூரிகளைத் திறந்து கல்வியை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றிக்காட்சிக்காரர்கள் ஆதாயம் அடைய வழி செய்ததாலேயே இன்று பல ஆயிரக்கணக்கில் பொறியாளர்கள் உருவாகியுள்ள தரமான நபர்கள் மிக்க குறைவாக இருக்கிறார்கள் அதனால் வேலைகிடைக்காமல், அடிமட்டத் தொழில்களில் வாடகைப் பேருந்து ஓட்டுபவராக, அஞ்சலக ஊழியராக என்றெல்லாம் குறைந்த வருமானத்தில் படித்த படிப்புக்கு ஏற்ற வருமானமில்லாமல் அவதிப்படுகிறார்கள் முறையான கல்வித்திட்டமில்லை சரியான ஆசிரியர் இல்லை இப்பொழுது தேர்வு எனும் வடிக்கட்டலுமில்லை எனில் எவர் தகுதியானவர் என்று எப்படி அறிவது? பலன் இனி தமிழக பொறியியல் படித்தவர்கள் விவசாயம், கட்டிடம் கட்ட உதவும் சித்தாள் போன்ற பணிக்கே லாயக்கு என்ற நிலை உருவாகிவிட்டது அதிலும் சோம்பேறிகளாக, குடிகாரர்களாக , கட்சித் தொண்டர்கள் என பயனில்லாத வகையில், எதிர்காலம் குறைத்த சிந்தனையில்லாதவர்களாக அவர்களை மாற்றிய பெருமை கழக தலைவர்களுக்கே உரியது இதர மாநில இளைஞர்கள் வெளிநாட்டில் மிக உயரிய பதவியில் இருக்கையில், நம்மவருக்கு ஆங்கில மொழியறிவும் குறைவாக வேலை இருப்பதால், வேலை கிடைப்பது ஏதோ அவர்களின் பூர்வ புண்ணியமே இன்றைய தேவை மாணவர்களின் கல்வி சார்ந்த கொள்கையைஅரை வேக்காடுகள் படிப்பறிவில்லாத அரசியல் தலைவர்கள் முடிவு செய்யாமல், இன்றைய வாழ்வியல் நடைமுறை அறிந்த, நம் இளைஞர்களின் நெடுநாளைய நலன் கருதும் அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் முடிவு செய்ய வேண்டும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வருமானம் இவை உறுதி செய்யப்பட வேண்டும் தேர்வுகள் இல்லாமல் வாழ்வில் (குறிப்பாக உயர் பதவி பெருவதில், வெளிநாட்டு வேலை இவற்றில் ) வாய்ப்புகள் இல்லை எனவே அவற்றை எதிர்கொள்ளத்தக்க பயிற்சிக்கு கூடங்கள் தேவை. இங்கு பேசும் பல தலைவர்களும் அதனை உறுதி செய்ய வேண்டும் இல்லையேல் ஒதுங்க வேண்டும். "FAIL" என்பதற்கு திரு கலாம் சொன்ன விளக்கம் புரிந்தவர்களாக, கல்வி கற்பதில் மாணவர்கள் போராடத் திறன் உள்ளவர்களாக மாற வேண்டும் மாணவர்கள் இதனைப் புரிந்து கொண்டால் நலம். தேர்வு எழுத்து முன்னரே தோற்போம் என்ற எண்ணமுடையவர் இந்தத் தேர்வை எதற்கு ஏற்க வேண்டும்? வேறு படிப்பை தொடர வேண்டியதுதானே "ஆசை இருக்கு தாசில் பண்ண ஆனால் அறிவு இருக்கு ..................?" என்ன செய்ய இவர்களை எண்ணி மனம் வருந்துவது தவிர வேறு வழியில்லை
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
15-செப்-202017:53:22 IST Report Abuse
Dr.C.S.Rangarajan மாணவர்கள் 'மனதில் உறுதி' மிக்கவர்களாக மேலும் மேலும் இருக்க ஒவ்வொருவரும் பாடுபடுதல் தேச புனரமைப்புக்கு இணையானதுபோலும். இந்த சேவைக்கும் நமக்கும் 'சமூக விலகல்' இருப்பதுபோல் பேசுவது விந்தையிலும் விந்தையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X