மாணவர்களுக்கு மன உறுதியை உங்கள் கட்சி அளிக்கலாமே| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாணவர்களுக்கு மன உறுதியை உங்கள் கட்சி அளிக்கலாமே

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (18)
Share
மாணவர்களுக்கு மன உறுதியை உங்கள் கட்சி அளிக்கலாமே

நீட் தேர்வை எதிர்த்து, மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க நான் செய்யப்போவது என்ன; மத்திய, மாநில அரசுகள் சிந்தித்து, துரிதமாக செயல்படுத்த வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தரவேண்டியது நம் கடமை - நடிகர் கமல் ஹாசன்


'உங்கள் கட்சி சார்பில், மாணவர்களுக்கு, மன உறுதி வழங்க, சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன் அறிக்கை.



அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் உள்ள சிலர், புரிதல் குறைவால், விமர்சனம் செய்கின்றனர். அ.தி.மு.க., கூட்டணி கட்சி என்றாலும், உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடக் கூடாது. கொரோனா காலத்தில், சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டாலும், பா.ஜ., கட்சி, மக்களுடன் அரசியல் இடைவெளி இல்லாமல் இருக்கிறது. வரும், 2021ல், பா.ஜ., கட்சி வலிமை காட்டும் - எச்.ராஜா


'நோட்டாவுக்கு அதிகமாக அல்லது கம்யூ.,களுக்கு அதிகமாக என, எவ்வளவு வலிமையை காட்டும் என சொன்னால், இன்னும் நன்றாக இருக்கும்' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி.



தமிழ், தாய்மொழி என்றால், ஹிந்தி நட்பு மொழி என, மக்கள் கருதுகின்றனர். இன்றைய கால கட்டத்தில், மக்கள் எல்லா மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என விரும்புகின்றனர்; அது, தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை - நடிகை காயத்ரி ரகுராம்


'தமிழ்மொழி, எந்த காலத்திலும் அழியாத வண்ணம், உலகம் முழுதும் வியாபித்துள்ளது. பிற மொழிகளை துாற்றுவதன் மூலம், தமிழை வளர்க்கலாம் என, கருதுவோர் அறிவிலிகள்...' என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி.



பிரதமர் விவசாய உதவித் திட்டத்தில், தமிழகத்தில் ஒரே மாதிரியான முறைகேடு நடந்துள்ளது. அதிகாரிகள் பங்கேற்புடன் முதல் முறையாக நடந்த மிகப்பெரிய ஊழல் இது தான். இந்த ஊழலில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.


latest tamil news





'முறைகேட்டை யார் செய்தது என்பதை தெரிந்தது போல, அறிக்கை வெளியிடுவதை வைத்தே, இது அரசியல் அறிக்கை என்பது தெளிவாகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை.



பிரதமரின், கிசான் திட்டத்தில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது - தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி.


'இத்தகைய முறைகேடு நடப்பதை எப்படி, தமிழக உளவுப் பிரிவு போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள், துவக்கத்திலேயே கண்டுபிடிக்க மறந்தனர் என்ற கேள்வி எழுகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X