பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றுப் பகுதியில் விவசாய பணிகள் தொடக்கம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப் பகுதிகளில், சம்பா சாகுபடிக்காக நெல் நாற்று விடும் பணி துவங்கியுள்ளது.


கேரளா மாநிலம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை காரணமாக, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து, தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த ஆக., 5 முதல், 20 வரை, கரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிக்காக முதல் கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, மழையை நம்பி பயிரிடப்பட்டிருந்த, சோளம் அறுவடை நடந்தது. இந்நிலையில், 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 88 அடியை நடப்பு மாத துவக்கத்தில் எட்டியது. இதனால் கடந்த, 5 முதல், சம்பா சாகுபடி பணிக்காக, இரண்டாம் கட்டமாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றி மலை, கரூர் வட்டாரங்களில், நெல் சாகுபடிக்காக நாற்று நடும் பணி துவங்கியுள்ளது. முன்னதாக தழை சத்துக்காக, வயல்களில் அவுரி பயிரிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் நெல் நாற்று நடவு பணிகள் துவங்கும். அதற்கு முன், வளர்ந்த நிலையில் உள்ள அவுரி பயிர்கள் வயல்களில், டிராக்டர்கள் மூலம் உழவுபடுத்தப்படும் என, விவசாயிகள் தெரிவித்தனர். அமராவதி அணை: நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 756 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில், 800 கன அடியும், கிளை வாய்க்காலில், 50 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. மாயனூர் கதவணை: மாயனூர் கதவணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 7,330 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 6,110 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. ஆத்துப்பாளையம் அணை: க.பரமத்தி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்றைய நிலவரப்படி நீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.97 அடியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X