பொது செய்தி

தமிழ்நாடு

பெண் எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை கூட்ட தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, 72 மணி நேரத்திற்கு முன், எம்.எல்.ஏ.,க்கள் கொரோானா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த, 11ல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, நான்கு எம்.எல்.ஏ.,க்களும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாயிலாக, கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். அதில், யாருக்கும் தொற்று இல்லை என்று முடிவு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், கிருஷ்ணராயபுரம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாவின் உதவியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நேற்று, எம்.எல்.ஏ., கீதா, 48, சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை செல்லவில்லை. மீண்டும், நேற்று காலை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாயிலாக, கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டார். அங்கு, எம்.எல்.ஏ.,வுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X