கற்களை கொண்டு செல்லும் டிராக்டர்களால் சாலையில் அச்சம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் நகராட்சியில் பழைமையான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில் இடிந்துபோன நிலையில் உள்ள பழமையான கட்டங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அகற்றப்படும் கட்டடங்களின் செங்கல் மற்றும் மண் துகள்கள் பெரும்பாலும் டிராக்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றனர். இவை பாதுகாப்பாக எடுத்து செல்லவது கிடையாது. அதனை ஒட்டி செல்பவர்கள் வேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்துவரும் கரூர் நகரில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், கட்டட கழிவுகளை ஏற்றிவரும்போது அவற்றின்மேல் தார்ப்பாய் போட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இவற்றை கடைப்பிடிக்காததால் டிராக்டரின் பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் செங்கற்கள், மண் துகள் தெறித்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, வாகன விதிமீறல்களில் ஈடுபடும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X