மின்னல் வேக வாகனங்கள்: விபத்தில் சிக்கும் மக்கள்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: அரவக்குறிச்சிக்குள் மின்னல் வேகத்தில் கனரக வாகனங்கள் செல்லவதால், பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதிகளில், தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. சரக்கு லாரிகள், மணல் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது, ஊரடங்குக்கு முன், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்கின்றன. இவர்கள், சில இடங்களில் நின்று, மாணவ, மாணவியரை இறக்கி விட்டு செல்கின்றன. அந்த நேரத்தில், மணல் லாரிகள் ஊருக்குள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால், மீண்டும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. இதனால், பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். சாலையில் செல்பவர்களை பற்றி கவலைப்படாமல் கனரக வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. டிரைவர்கள் உரிய ஆவணம் இல்லாமலும், குடிபோதைகளிலும் லாரிகளை ஓட்டி செல்கின்றனர். விபத்து ஏற்படும் போது, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தால் கூட, அவர்கள் மீது தப்பிக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்கின்றனர். எனவே, 'புறவழிச்சாலைகள் இருக்கும்போது, சரக்கு வாகனங்களை, அரவக்குறிச்சிக்குள் வந்து செல்ல தடை விதிக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X