அடிப்படை வசதிகள் இல்லாத கணபதி நகர்; கரூர் நகராட்சி பகுதியில் நீடிக்கும் அவலம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் நகரின் மையப்பகுதியில், மழை நீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. அதில், பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் உலா வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


கரூர் நகராட்சி, 39வது வார்டு சுங்ககேட் அருகே கணபதி நகர், கலைஞர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், அதே பகுதியில் பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனும் செயல்படுகிறது. இந்நிலையில், மழை பெய்யும் போது, அந்த பகுதியில் மழைநீருடன், வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரும் தேங்குகிறது. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது: இந்த பகுதியில் தார்ச்சாலை இல்லை. மண் சாலையில்தான் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழைக் காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை வெளியே செல்ல முடியாது. பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகின்றன. பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல புதிதாக அமைக்கப்பட்ட பிளாட்பாரம் தடையாக உள்ளது. இதனால், அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களில், புகுந்து வீடுகளுக்கு செல்கிறோம். இதனால், சுங்க கேட் பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல சாலை வசதி வேண்டும். மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரிவது இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X