அரசியல் செய்தி

தமிழ்நாடு

' நடிகர்களுக்கு கூட்டம் வரும்... ஓட்டு வராது' : சரத்குமார்

Added : செப் 15, 2020
Share
Advertisement
' நடிகர்களுக்கு கூட்டம் வரும்... ஓட்டு வராது' : சரத்குமார்

சேலம் : ''தமிழகத்தில் நடிகர்களுக்கு கூட்டம் சேரும் அது ஓட்டாக மாறாது'' என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
சேலத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ள நிலையில் அதற்கு ஏற்ப மாணவர்கள் எத்தகைய தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. அதே நேரத்தில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டால் மகிழ்ச்சி அடைவேன்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. தி.மு.க. எதிரி கட்சி போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது.சட்டசபை தேர்தலை முன்னிட்டு அக்டோபர் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 234 தொகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போட்டியிட தயாராக உள்ளேன்.
குறிப்பிட்ட மொழியை கற்க வேண்டும் என யாரையும் திணிக்கக் கூடாது. யார் எந்த மொழியை வேண்டுமானலும் கற்றுக் கொள்ளலாம் என்ற நிலை உருவாக வேண்டும்.ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்து தெரிவிப்பேன். அரசியலில் நான் அவரை விட சீனியர். நடிகர்களுக்கு கூட்டம் சேரும்; அது ஓட்டாக மாறாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X