அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் பட்டியலை கிழித்து வீசிய பா.ஜ., மாவட்ட தலைவர்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கரூர் : கரூரில் நடந்த பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பட்டியலை பா.ஜ.,மாவட்ட தலைவர் கிழித்து வீசியதால், நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் தான் தோன்றிமலையில் மாவட்ட பா.ஜ. செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் நடக்கும் போது மாவட்ட தலைவர் சிவசாமியிடம் அளித்த அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பட்டியலை அவர் கிழித்து எறிந்துள்ளார். இது குறித்து பா.ஜ. அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாநில செயலாளர் மதுகுமார் கூறியதாவது:
இந்த கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து வருகிறேன். கடந்த 1996ல் முதல் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட போது சைக்கிளில் சென்று கட்சியை வளர்த்து இருக்கிறேன்.இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாலை நடந்த கூட்டத்தில் மேடையில் மாநில இணை பொருளாளரும் மாவட்ட பார்வையாளருமான சிவசுப்பிரமணியிடம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பட்டியலை அளித்தேன். அவரிடம் நாளை மறுநாள்(இன்று) அமைப்பு சாரா தொழிலாளர் தலைவர் பாண்டித்துறை வருகிறார்.அவர் வாயிலாக வெளியிட வேண்டும் என்பதால் பட்டியலை இறுதி செய்து தரவேண்டும் என கூறினேன்.
அவர் அருகில் அமர்ந்திருந்த மாவட்ட தலைவர் சிவசாமியிடம் அந்த பட்டியலை அளித்தார். உடனே 'டென்ஷனான' சிவசாமி நிர்வாகிகள் மத்தியில் பட்டியலை கிழித்து வீசி எறிந்தார். பின் 'கட்சியில் நீ யார்' என கேட்டார். நான் சத்தம் போட்டு விட்டு கூட்டத்தில் வெளியே வந்து விட்டேன்.அவருக்கு நிர்வாகி நியமனத்தில் மாற்று கருத்து இருந்தால் பிறகு தெரிவிக்கலாம். ஆனால் என்னை கேவலப்படுத்துவதாக நினைத்து கொண்டு மாவட்ட பார்வையாளரை அவமதிக்கும் வகையில் பட்டியலை துாக்கி எறிந்தார். சிவசாமி மாவட்ட தலைவரானது முதல் என்னை மட்டுமல்ல எந்த நிர்வாகிகளையும் மதிப்பது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X