திருப்பூர் : ஜே.இ.இ., தேர்வில் திருப்பூரை சேர்ந்த, அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்று, அசத்தியுள்ளார்.
என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்த சவுந்தர்யா என்ற மாணவி, கடந்த முதல் தேதி நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில், 77.9 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
திருப்பூர் மாவட்ட அளவில், அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்ற பெருமையை பெற்றுள்ள சவுந்தர்யா கூறுகையில், ''மனப்பாடம் செய்யாமல், கருத்தை உள்வாங்கி படிப்பேன். ஜே.இ.இ., தேர்வுக்கென தனியாக பயிற்சி மையத்தில் சேரவில்லை. வகுப்பறையில் படிப்பதோடு சரி; அந்தளவு, ஆசிரியர்களின் கற்பித்தல் இருந்தது. பிளஸ் 2 வில், 427 மதிப்பெண் பெற்றேன். ஐ.ஐ.டி., யில் நுழைந்து மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம்,'' என்றார்.இவரது தந்தை வெள்ளிங்கிரி, கார்பென்டர். அம்மா சரஸ்வதி, இல்லத்தரசி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE