கோவை: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'இந்தி தெரியாது போடா' எனும் வாசகம் அடங்கிய, 'டி-ஷர்ட்' கையில் வைத்திருப்பது போன்று போலியாக மீம் தயாரித்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்தி திணிப்பு என்று விவாதங்கள், சமூகவலைதளங்களில் அதிகளவு வைரலாகி வருகின்றன. இதற்காக, 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகத்துடன் டி-ஷர்ட், மாஸ்க் தயாரித்தும், சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.இதேபோன்று, பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பது போல், மீம்ஸ் தயாரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் போட்டோ ஒன்றையும், போலியாக மாற்றியுள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ, 'இந்தி தெரியாது போடா' எனும் வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை தனது கையில் பிடித்திருப்பது போன்று மீம் ஒன்று இணையதளத்தில் உலாவி வருகிறது.


ஆனால், இது உண்மையில்லை.இந்த மீம் 'போட்டோ ஷாப்' மூலம் எடிட் செய்யப்பட்டு, சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோ தடுப்பு மருந்து குறித்து, 'வேக்சின்ஸ் ஆர் சேப் அண்ட் சேவ் லைவ்ஸ். லவ் திஸ் ஷர்ட்' என்ற ஆங்கில வாசகத்துடன் அவரது டிவிட்டர் பக்கத்தில், 2019 ம் ஆண்டு மே 30ல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை தான் எடிட் செய்து, 'தமிழுக்கும், தமிழர்களுக்கும் பிரச்னை என்றால் சும்மா இருக்க மாட்டேன்' என, ஜஸ்டின் ட்ரூடோ பெயரில் போலியாக மீம் தயாரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.