கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாஸ்போர்ட் கோரி இந்தோனேசியாவினர் வழக்கு

Added : செப் 15, 2020
Share
Advertisement


மதுரை : ஊரடங்கில் மதப்பிரசாரம் செய்ததாக பதிவான வழக்கில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 பேர் பாஸ்போர்ட்களை ஒப்படைக்க தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த முகமது சோபியில் அர்கம் உட்பட 12 பேர் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தனர். நிபந்தனைகளை மீறி, டில்லி மாநாட்டில் பங்கேற்றனர். மார்ச் 9 ல் தஞ்சாவூர் மாவட்டம் வந்தனர். ஊரடங்கை மீறி, மதப்பிரசாரத்தில் ஈடுபட்டு தொற்று நோய் பரவும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக பொது சுகாதாரச் சட்டம், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அதிராமபட்டினம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.பட்டுக்கோட்டை நீதிமன்றம், 'இவர்களுக்கு 72 நாட்கள் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது. அலைபேசிகள், அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், ஒட்டுநர் உரிமம், பாஸ்போர்ட்களை மேல்முறையீட்டு காலத்திற்கு பின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்,' என செப்.,1ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முகமது சோபியில் அர்கம் உட்பட 12 பேர்,'கீழமை நீதிமன்றம் சரியாக பரிசீலிக்காமல் உத்தரவிட்டுள்ளது. சென்னை சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எங்களை இந்தோனேசியா அனுப்ப துாதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எங்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தனர்.நீதிபதி ஆர்.பொங்கியப்பன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர், 'இம்னுவை வாபஸ் பெற மனு செய்ய அவகாசம் தேவை,' என்றார். நீதிபதி இன்று (செப்.,15) ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X