முகலாயர் அருங்காட்சியகத்துக்கு 'சத்ரபதி சிவாஜி' பெயர்: உ.பி., முதல்வர் அறிவிப்பு

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement

லக்னோ: ''ஆக்ராவில் கட்டப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முகலாயர் அருங்காட்சியகத்திற்கு, 'சத்ரபதி சிவாஜி மஹராஜ்' எனப் பெயர் சூட்டப்படும்,'' என, உத்திரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


latest tamil news




உலக அதிசயமான தாஜ்மகால் உ.பி.,யின் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதைக் கட்டிய முகலாய மன்னர் ஷாஜஹான் அமைத்த செங்கோட்டை, அதன் அருகில் உள்ளது. இதில் முகலாய மன்னர் அவுரங்கசீபால், சத்ரபதி சிவாஜி சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கிருந்து அவர் பழக்கூடைகளில் தப்பியதாகவும் வரலாற்று பாடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை எனவும், சத்ரபதி சிவாஜி ஜெய்பூரின் ஒரு மாளிகையில் தான் சிறை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அந்நகரின் பிரபல வரலாற்றாசிரியரான ராம்நாத், முகலாயர்கள் குறித்த தனது ஆய்வு நூல்களிலிலும் எழுதியுள்ளார். சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ் உ.பி.,யில் முதல்வராக இருந்த போது, ரூ.140 கோடி செலவில் முகலாயர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும் அருங்காட்சியகத்தைக் கட்டும் பணிகளைத் துவக்கிவைத்தார்.



latest tamil news



இந்நிலையில், ஆக்ராவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அம்மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் யோகியின் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் ஆக்ராவின் சிற்ப கிராமம் பகுதியில் கட்டப்பட்டு வரும் முகலாயர் அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் செய்ய இருப்பதை அறிவித்தார்.

'நம் நாயகர்களாக முகலாயர்களை எப்படி கருத முடியும்... எப்படி புகழ முடியும்? இதற்கு தேசியவாதத்தை ஊட்டி, பொதுமக்களின் சுயமரியாதையைக் காத்த மன்னர் சிவாஜியின் பெயரை சூட்டுவதே பொருத்தமாக இருக்கும்' என, பெயர் மாற்றத்திற்கானக் காரணமாக முதல்வர் யோகி இதைத் தெரிவித்தார்.


latest tamil news



மகராஷ்டிராவை சிவாஜியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் சிவசேனாவுடன் பா.ஜ.,விற்கு கருத்து மோதல் நிலவி வருகிறது. இதற்கு அங்கு காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா அமைத்த ஆட்சியே காரணம். இந்த சூழலில் ஆக்ரா அருங்காட்சியகத்தின் முகலாயர் எனும் பெயர் சத்ரபதி சிவாஜி பெயரில் மாற்றம் செய்யப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உ.பி.,யில் முகலாயர் காலங்களின் முஸ்லிம் பெயர்கள் மாற்றப்படுவது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே, உ.பி.,யின் மாவட்டங்களான அலகாபாத்தை பிரயாக்ராஜ் எனவும், பைஸாபாத்தை அயோத்யா என்றும் முதல்வர் யோகியால் பெயர் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-செப்-202013:06:31 IST Report Abuse
Malick Raja சுதந்திரம் பெற பாடுபட்டவர்களை காணோம் .. நேரு ..இந்திரா .. ராஜிவ் . நம்ம வாஜ்பாய் . போன்றோரெல்லாம் இருந்த இடம் தெரியவில்லை
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-செப்-202008:53:34 IST Report Abuse
Sampath Kumar அப்படியே தாஜ் மஹ்லக்கு குப்தர்கள் பேரு வைங்க ??
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் பேர்சொல்ல ஒரு பிள்ளை உத்தர பிரதேசத்தில் இல்லாமல் போனதோ? மராட்டிய மன்னனுக்கும் ஆக்ரா கோட்டைக்கும் ஸ்நாந ப்ராப்த்தியேதுமில்லையே சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேர சூட்டலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X