கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி : உயர்நீதிமன்றம் கேள்வி

Added : செப் 15, 2020
Share
Advertisement


மதுரை : ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என கேள்வி எழுப்பி, அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் பிரதீப் சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில் ஆனந்த், நீதிமணி, மேனகா நிதி நிறுவனம் நடத்தினர். இதில் முதலீடு செய்தால் இரட்டிப்புத் தொகை வழங்கப்படும் என்றனர். 2019 ல் ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். என்னைப்போல் பலர் முதலீடு செய்தனர். தொகையை திரும்பத் தராததால் இந்நிதிறுவனத்திற்கு எதிராக ராமநாதபுரம் பஜார் போலீசார் மோசடி வழக்குப் பதிந்தனர். விசாரணை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
ரூ.300 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதால், இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இதை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.சில உயரதிகாரிகளின் தலையீட்டால் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பிரதீப் சக்கரவர்த்தி மனு செய்தார்
.நீதிபதி ஆர்.பொங்கியப்பன் விசாரித்தார்.அரசுத் தரப்பில்,'இவ்வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது,'என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி: இவ்வழக்கை இந்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். இவ்விவகாரத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது, மோசடியில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., அக்.,14 ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X