பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா டிஸ்சார்ஜ் 93 சதவீதத்தை தாண்டியது

Added : செப் 15, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 287 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
டிஸ்சார்ஜ் விகிதம் 93.09 ஆக உயர்ந்தது.மதுரையில் சிகிச்சையில் இருந்த 287 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 14,330 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 93.08 ஆக உயர்ந்தது. புதிதாக 95 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 15,394 ஆகும். இதுவரை 372 பேர் இறந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் நேற்று கொரோனா பாதித்த 116 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7067 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தலைமைக் காவலர் உட்பட 76 பேரும், இதுவரை மொத்தம் 7940 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 723 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் நேற்று 85 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். மொத்தம் 12, 917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13, 833 ஆக உயர்ந்தது.போடி, வருஷநாடு குமணன்தொழு, ஆண்டிபட்டி அனுப்பப்பட்டி பகுதிகளை சேர்ந்த மூவர் பலியாயினர். எண்ணிக்கை 231 ஆக உயர்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 22 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். புதிதாக 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 5207 பேர் பாதிக்கப்பட்டதில் 4846பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 247 பேர் சிகிச்சையில் உள்ளனர். 114 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கையில் குணமடைந்த 21 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். தொற்றுடன் 15 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

விருதுநகரில் 91 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 42 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதுவரை 13,726 பேர் பாதிக்கப்பட்டதில் 13,136 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, 386 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
திருநெல்வேலியில் நேற்று 110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 9976 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 72 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11192 ஆனது. தற்போது 1025 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 193 பேர் இறந்துள்ளனர்.
தென்காசியில் நேற்று 47 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 5638 பேர் குணமடைந்தனர். நேற்று 80 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6344 ஆனது. தற்போது 588 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 118 பேர் இறந்துள்ளனர்.
துாத்துக்குடியில் நேற்று 40 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 11546 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்பு 12374 ஆனது. தற்போது 709 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 119 பேர் இறந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X