பொது செய்தி

தமிழ்நாடு

முடிவுக்கு வந்தது 3 நாள் போராட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் முன்னாள் செயலர் ராஜலிங்கம் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மூன்றாவது நாளாக நடந்த மறியல் போரட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடியை சேர்ந்த ராஜலிங்கம் செப்.12ல் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். மதுரை மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த நிலையில் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இது தொடர்பாக தொடர்ந்த மறியலால் 600 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் நடந்த மறியலால் போக்குவரத்து முடங்கியது.
அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பெருமாள் பட்டி, கூனங்குளம் வழியாக 10 கி.மீ., சுற்றி சென்றது.நேற்று காலை 10:00 மணிக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமையில் ராஜபாளையம் காந்தி சிலை அருகே மறியல் நடந்தது. கொலையில் தொடர்புடைய முனியராஜ், பாலமுருகன், பாலசுப்பிரமணியம் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக போலீசார் கூற கலைந்து சென்றனர்.
இதனிடையே சங்கரன் கோவில் ரோட்டில்தொடர்ந்த மறியலை கைவிடக்கோரி திண்டுக்கல் டி.ஐ.ஜி., (பொறுப்பு) முத்துச்சாமி, கலெக்டர் கண்ணன், எஸ்.பி.,க்கள் பெருமாள் (விருதுநகர்) ராஜராஜன் (ராமநாதபுரம்) பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை அடுத்து மூன்று நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X