சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து பிரச்னையால் தீக்குளிக்க முயற்சி

Added : செப் 15, 2020
Share
Advertisement
 சொத்து பிரச்னையால் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம் : சக்கரக்கோட்டை மாஜி ஊராட்சி தலைவர் நுார்முகமது, சொத்தை ஆக்கிரமித்ததாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை போலீசார் மீட்டனர்.
ராமநாதபுரம் காரிக்கூட்டத்தை சேர்ந்த பாத்திமா பீவி 65. தனக்கு சொந்தமான 1.16 ஏக்கர்நிலத்தை போலியாக பட்டா தயாரித்து நுார்முகமது ஆக்கிரமித்ததாக கலெக்டரிடம் மனு கொடுக்க மகன் அப்பாஸ்கான் 42, குடும்பத்தினருடன்வந்தார். அப்போது டீசலை ஊற்றி அப்பாஸ்கான் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர்.
பாத்திமா பீவி மனுவில் கூறியிருப்பதாவது:
சக்கரக்கோட்டை போக்குவரத்து நகரில் 14 ஏக்கர் 14 சென்ட் பூர்வீக சொத்தில் எனது தந்தை கமர்தின் பங்கான 1.16 ஏக்கர் நிலம் நுார் முகமது, அவரது வாரிசுகள் சவுகத் அலி, சாதிக் பாட்ஷா, மெகராஜ் பானு பெயரில் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாசில்தார் முருகவேல் உடந்தையாக இருந்தார். அவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு சொத்தை மீட்டுத் தர வேண்டும், என தெரிவித்துள்ளார்.
தாசில்தார் முருகவேலிடம் கேட்ட போது, ''நான் இதுகுறித்து ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளேன். எதுவானாலும் கலெக்டரிடம் பேசுமாறு கூறியுள்ளேன்,'' என்றார்.
கலெக்டர் வீரராகவ ராவிடம் கேட்ட போது, ''தவறாக பட்டா வழங்கப்பட்டிருந்தால் ரத்து செய்யப்படும்,'' என்றார்.
நுார்முகமது கூறுகையில், ''பட்டா எங்கள் பெயரில் உள்ளது. பல ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்து வருகிறோம். 2016ல் இவர்கள் தாலுகா அலுவலகத்தில் கொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X